100% Kadhal Movie Songs Lyrics – 100% காதல் பாடல் வரிகள்

100% Kadhal Movie Songs Lyrics – 100% காதல் பாடல் வரிகள்

Movie Name100% Kadhal
படத்தின் பெயர் 100% காதல்
StarringG. V. Prakash Kumar
MuiscG. V. Prakash Kumar
Year2019

Yeanadi Yeanadi Lyrics

SingersKeshav Vinod
MusicG. V. Prakash Kumar
LyricsMohanrajan
Movie100% Kadhal
Year2019

ஏனடி காற்றிலே ஆடும் காகிதம்

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல
தூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி
கானலாய்த் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல
தூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி
கானலாய்த் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி

இருவிழிகள் போதவில்லை
அழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே

கண்ணுக்கு இமை இன்று தூரம்
நெஞ்சுக்கு நினைவின்று தூரம்
உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே

கிளைமேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலே ஒன்றிங்கு மண்மேல்
வீழ்ந்தாலோ அதுமீண்டும் சேரக் கூடுமோ

உன்னோடு நான் வாழந்த நொடிகளெல்லாம்
கண்ணாடி அதுபோல உடைந்ததடி
ஒன்றாக நாம் சேர்த்த நினைவு எல்லாம்
ஒவ்வொன்றாய் என் முன்னால் தெரிந்ததடி

நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால்
வலிகளை மனம்தான் உணராதம்மா
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால்
விழிகளும் அழுதிடப் பழகாதம்மா

என் காதல் என் கோபம் தானா
உன் காதல் உன் மௌனம் தானா
தெரியாமல் இருக்கின்றோம் எனோ பாரடி…

ஒரு வார்த்தை நான் சொன்னால் போதும்
மறு வார்த்தை நீ சொன்னால் போதும்
எல்லாமே தலைகீழாய் மாறும் பேசடி…

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல
தூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி
கானலாய்த் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி

இருவிழிகள் போதவில்லை
அழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே

கண்ணுக்கு இமை இன்று தூரம்
நெஞ்சுக்கு நினைவின்று தூரம்
உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே

கிளைமேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலே ஒன்றிங்கு மண்மேல்
வீழ்ந்தாலோ அதுமீண்டும் செராக் கூடுமோ

Oru Vaanam Thandiye Lyrics

SingersAndrea Jeremiah, G. V. Prakash Kumar
MusicG. V. Prakash Kumar
LyricsMohanrajan
Movie100% Kadhal
Year2019

ஒரு வானம் தாண்டியே

ஒரு வானம் தாண்டியே
அன்பே நான் பறக்கிறேன்
இரு மேகம் போலவே
அன்பே நான் மிதக்கிறேன்

உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னாள் பின்னால் ஐயோ இன்று
என் கால்கள் நடக்குதே

அன்பே அன்பே ஒரு பேரலை
என்னை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ

உன் வீட்டிலே வாழ்கிறேன்
ஆனாலும் நீ தூரமே
என் தொழிலே சாய்கிறாய்
என் வாலிபம் பாவமே

என் வளையல் ஏங்குதே
தினம் சண்டை போடவே
நாம் அறைகள் தூங்குதே
நாம் காதல் பேசவே

விண்ணோடு தான் மிதக்கிறேன்
என் நட்சத்திரங்களும் நீ தானடி
உன் வானவில் நானடா
என் வானமோ நீயடா

உரையாடும் நேரமே
தடுமாறி போகிறேன்
அதை அறிந்தும் நானுமே
உன்னை திட்டி தீர்க்கிறேன்

உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னாள் பின்னால் ஐயோ இன்று
என் கால்கள் நடக்குதே

அன்பே அன்பே ஒரு பேரலை
என்னை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ

Kannum Kannum Plus Lyrics

SingersG. V. Prakash Kumar, Maalavika Sundar
MusicG. V. Prakash Kumar
LyricsMohanrajan
Movie100% Kadhal
Year2019

கண்ணும் கண்ணும் பிளஸ்

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

XY-யும் மிக்ஸாஹி
இன்டு போல கிராஸ் ஆகி
லிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்

நானோ வா அட நீ சிரிச்சா
ஸ்பீடாக என் மனம் பறக்கும்

உன் டேட்டா அட என் டேட்டா
தீர தீர பேசவா…

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

டிஎன்எ ஓஹ் வரைபடத்தில்
உன் போட்டோ தான் தெரிகிறதே
நியூட்ரான் எலக்ட்ரான்
உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம்…

சென்டிகிரேடும் தூளாகும்
முத்த வெப்பத்தில்
பாஹ்ரேன்ஹேய்டும் பாழாகும்
காதல் உஷ்ணத்தில்

நியூட்டன்னின் முழுவிதி நீ
நான் கொஞ்சும் முழுமதி நீ

மண் நோக்கி வந்தாலோ க்ராவிட்டேஷன்
பெண் நோக்கி வீழ்ந்தாலோ இன்ஃபாஹ்டேஷன்

போக போக புரியலையே
ஆனால் மனம் இதை வெறுக்கலையே
டார்வின் சொன்ன தியரி எல்லாம்
ஒன் பை ஒண்ணா நடக்கிறதே

ஹோர்மோன் சொல்லும்
ஹாய் பாய்-இல்
பீலிங் வருகிறதா?

அதையும் தாண்டி
ஏதேதோ
ஈர்ப்பில் வருகிறதா?

முதல் ஸ்பரிசம் புதிராகும்
மறு ஸ்பரிசம் பதிலாகும்

நும்பெற ஒண்ணாக்கும் கால்குலேஷன்
ஹோர்மோனேகல் ஒண்ணாக்குமே இன்ஃபாஹ்டேஷன்

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

XY-யும் மிக்ஸாஹி
இன்டு போல கிராஸ் ஆகி
லிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்

Leave a comment