96 Movie Songs Lyrics – 96 பாடல் வரிகள்

96 Movie Songs Lyrics – 96 பாடல் வரிகள்

Movie Name96 
படத்தின் பெயர் 96 
StarringVijay Sethupathi, Trisha Krishnan, Gouri G kishan
MuiscGovind Menon
Year2018

Kaathalae Kaathalae Lyrics

SingersGovind Vasantha, Chinmayi
MusicGovind Menon
LyricsKarthik Netha
Movie96
Year2018

காதலே காதலே

கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ

The Life of Ram Lyrics

SingersPradeep Kumar
MusicGovind Menon
LyricsKarthik Netha
Movie96
Year2018

கரை வந்த பிறகே

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே 
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உ ள்ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன் 
இங்கே இன்றே ஆழ்கிறேன்

யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா

நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்

தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் திறந்தே
காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன்

திமிலெரி காலை மேல் தூங்கும் காகமே
பூமி மீது இருப்பேன்
புவி போகும் பொக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்

ஏதோ ஏக்கம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

Iravingu Theevai Lyrics

SingersChinmayi, Pradeep Kumar
MusicGovind Menon
LyricsUma Devi
Movie96
Year2018

இரவிங்கு தீவாய்

இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே

பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்

மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்

இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே

இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் மீறி தடை போடுதே

நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…

தினம் தினம் உயிர் தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்து துணை
மனம் கொண்டாடி வாழுமே

மரங்கள் சாய்ந்து கூடு
வீழ்ந்து குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே

மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை செருமமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ பொய் வா வா வா

Vasantha Kaalangal Lyrics

SingersChinmayi
MusicGovind Menon
Lyrics
Uma Devi
Movie96
Year2018

வசந்த காலங்கள்

வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…

பார்வையின் பாராமையில் வாழுமோ என் நெஞ்சம்…
வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றியேங்கி போகுதே
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…

ஹ்ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே

வா…பாரங்கள் மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே

காதல் நிலவாய் அட நான் காயவா
காலை ஒளியில் ஏமாறவா வா…
காயும் இருளில் அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே அழகே…

வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…

Thaabangale Lyrics

SingersChinmayi, Pradeep Kumar
MusicGovind Menon
LyricsUma Devi
Movie96
Year2018

தாபங்களே ரூபங்களாய் பாடுதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாத
அதே நிலா அருகினில் வருதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

நான் நனைத்திடும் தீயா பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனனை தானா
காதல் கனாக்கள் தானா தீரா உலா நானா, போதாதா
காலம் வினாக்கள் தானா போதும்…
அருகினில் வர மனம் உருகித்தான் கறையுதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

Anthaathi Lyrics

SingersChinmayi, Govind Vasantha, Bhadra Rajin (Carnatic portion) Chorus and M. Nassar
MusicGovind Menon
LyricsKarthik Netha
Movie96
Year2018

நீ அந்தாதி

பேரன்பே காதல் உளநோக்கி ஆடுகின்ற ஆடல்
சாதா… ஆறாத ஆவல்

ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்
ப்ரத்தியேகத் தேடல்
தீயில் தீராத காற்றில்
புள் பூண்டில் புழுவில் உள்ளத்தில் இல்லத்தில்

தானே எல்லாமும் ஆகி நாம் காணும் அருவமே
இத்தியாதி காதல் இல்லாத போதும் தேடும் தேடல் சதா…

மாறாது காதல் மன்றாடும் போதும் 
மாற்று கருத்தில் மோதும் மாளாத ஊடல் ஆஅ…

நாம் இந்த தீயில் வீடு காட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில் ஊஞ்சல் கட்டும் தூசி 
நாம் இந்த நீரில் வழக்கை ஓட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில் காமத்தின் ருசி

காதல் கண்ணீரில் சிலந்தி காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி காலம் தோறும் தொடரும் டைரி
காதல் தெய்வீக எதிரி காதல் சாத்தானின் விசிடி
காதல் ஆன்மாவின் புலரி வாழ்ந்து பெற்ற டிகிரி

ஓர்… விடைகுள்ளே… வினாவெல்லாம்… பதுங்குதே…

ஆஅ… நாம்… கரைந்ததே…
மறைந்ததே… முடிந்ததே… ஆஅ…

ஆஅ… கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் எழிலிசையே

பஞ்ச வர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி ஈஈ…
காதலே காதலே தனி பெருந் துணையே
கூட வா கூட வா போதும் போதும் 

காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகி வா நீ…

ஆஅ… திகம்பர… வலம்புரி…
சுயம்பு நீ… நீ…

ஆஅ… பிரகாரம் நீ… பிரபாவம் நீ…
பிரவாகம் நீ… நீ…

ஆஅ ஆஅ… ஸ்ருங்காரம் நீ…
ஆங்காரம் நீ… ஓங்காரம் நீ… நீ…

நீ… அந்தாதி நீ… அந்தாதி நீ…
அந்தாதி நீ… நீ…

ஹ்ம்ம்… தேட வேண்டாம்
முன் அறிவி பின்றி வரும் அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்

காதல்… காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும்
அதை அல்லி அணைத்து கொள்ளுங்கள்

அன்பாக பார்த்து கொள்ளுங்கள் காதல் தாங்கும்
காதல் தயங்கும் காதல் சிரிக்கும் காதல் இனிக்கும்

காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும் காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும் காதல் பிரியும்

கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்
காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினாள்
தூரத்தில் தயங்கி நின்றாள்
அருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள்

போதும்… காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம் மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை காதல்…

Leave a comment