Aanandham movie Songs Lyrics – ஆனந்தம் பாடல் வரிகள்

Aanandham Movie Songs Lyrics – ஆனந்தம் பாடல் வரிகள்

Movie NameAanandham
படத்தின் பெயர் ஆனந்தம்
StarringG. V. Prakash Kumar
MuiscS.A.Rajkumar
Year2001

Enna Ithuvo Ennai Suttriye Lyrics

SingersHariharan
MusicS. A. Rajkumar
LyricsNa. Muthukumar

என்ன இதுவோ என்னைச் சுற்றியே

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ..)

Aasai Aasaiyai Lyrics

SingersK. J. Yesudas
MusicS. A. Rajkumar
Lyrics

ஆசை ஆசையாய் இருகிறதே

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பனிவாடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்திருபோம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதை போல வாழ்ந்திருபோம்
எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே
அடை மழையாக பெய்யும் சந்தோசம்

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்

Pallangkuzhiyin Lyrics

SingersHarini, P. Unnikrishnan
MusicS. A. Rajkumar
Lyrics

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு

தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா

செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிழும்
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி

இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

Kalyaana Vaanil Pokum Lyrics

SingersSujatha Mohan, Unni Menon
MusicS. A. Rajkumar
LyricsTholkapiyan

கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

ஹேய்… ஜொலிக்க ஜொலிக்க
ஒரு ஜோடி புறா வந்திருச்சு…
ஸரி ஸத பத ஸரி… ஸரி ஸத பத ஸரி…
சாமந்தி வாசத்தில் ரெண்டும்
சந்தனத்தை பூசிக்கிச்சு…
ஸரி ஸத பத ஸரி… ஸரி ஸத பத ஸரி…

கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
அழியாதது காதல் கோலம்
ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்

நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்
வீட்டுக்குள் வர வேண்டும்
எந்தன் தோட்டது பூவுக்கும் பூக்கும் ஆசை
உன்னால் எழ வேண்டும்…. (கல்யாண)

தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி
வாசல் எங்கும் தெளிப்பேனே
நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே
யாரோ போல ரசிப்பேனே

ஜீவநதி ஏங்கும்……ஏங்கும்….
அடி மனசு பொங்கும்
நெஞ்சுக்குழி எங்கும்…..எங்கும்….
உன் நினைவு தங்கும்
நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன் (கல்யாண)

மனைவியான நிமிசத்திலிருந்து
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே
தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்
துள்ளி எழுந்து பார்ப்பேனே

குளியலறை பக்கம்…..பக்கம்…
தலை துவட்ட வருவேன்
படுக்கையினில் மிச்சம்…..மிச்சம்…
வைத்து அங்கே தருவேன்
வளையோசையால் சைகை காட்டுவேன்
தயங்காமலே தேவை யாவும் கேட்பேன் (கல்யாண)

Gokulathu Radhai Lyrics

SingersS.P.B. Charan, Sujatha Mohan, Unni Menon, Yugendran
MusicS. A. Rajkumar
LyricsPa. Vijay

கோகுலத்து ராதை வந்தாளோ

சூடி தந்த சுடர்க்கொடியே சுபவேளை நீ வருக
தேடிக் கொண்ட திரவியமே தேன் மாலை போல வருக
மின்னும் அம்பு விழி சந்திர பிம்பம்
பொன்னொளி வீச மங்கை மைதிலி இவள்
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட சங்கம் சூழ வருக
ஸ்ரீரங்கன் தாளை அடைய வளர் திங்களாகி வருக……

கோகுலத்து ராதை வந்தாளோ இந்த
கல்யாண தேரிலே…கல்யாண தேரிலே…..
மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள்
வீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே
அந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில் தாய்ப்பாசம் கொண்டு வந்தாள் (கோகுல)

பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க
பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க
தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க
இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க

உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு
மூணு முழம் மல்லிகைப்பூவும்
கொஞ்சம் அல்வாவும் போதுமே
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்
அடி தலை சாஞ்சு மயங்குமே

தஞ்சாவூர் பொம்மப் போலத்தான் உங்க
மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவான்
தேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஹோய்
உங்க குதிரை வாலாட்டுமா…

ஏய் தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே கண்டீரோ
சிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்திரம்
போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி
அது நமக்குள்ள தானடி
சோடியத்தான் நல்லாப் பாருடி
மதுர மீனாட்சி சொக்கன்டி….

வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
புது மல்லிகை பூத்ததோ

மாடக் குயில் சத்தத்தில்
மஞ்சள் முகம் நாணத்தில்
மங்கலம் வந்ததோ……
தினம் மங்கலம் வந்ததோ

இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில் தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா
எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ ஓ…ஓ….ஓ….ஓ…

Leave a comment