Aaru Movie Songs Lyrics – ஆறு பாடல் வரிகள்

Aaru Movie Songs Lyrics – ஆறு பாடல் வரிகள்

Movie NameAaru 
படத்தின் பெயர் ஆறு 
StarringSurya, Trisha Krishnan, Vadivelu
MuiscDevi Sri Prasad
Year2005

Paakatha Lyrics

SingersTippu, Sumangali
MusicDevi Sri Prasad
LyricsNa. Muthukumar

பார்க்காத என்ன பார்க்காத

பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்தும்மில்ல..

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட

நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட

என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட…

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே

ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்

பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

Nenjam Enum Lyrics

SingersSrinivas, Kalpana
MusicDevi Sri Prasad
LyricsNa. Muthukumar

நெஞ்சம் எனும் ஊரினிலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

வாழ்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே…

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்

நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்

பேனா எடுத்த தானா கைகள்
உன் பேரை தான் எழுதியதே

கோயில பாத்த தானா கைகள்
உனக்காகதான் கும்பிடுதே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

ன ந ந ..
b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy
இந்த ரெண்டு பேருகுள்ளயும்
touching touching
ada anytime anywhere
kissing kissing
ஆஹா..

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்

மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் போது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்

நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy

Soda Bottle Lyrics

SingersShankar Mahadevan, Saaki Mukhesh
MusicDevi Sri Prasad
LyricsNa. Muthukumar

சோடா பாட்டில்

அஞ்சு கிலோ அரிசி வாங்கி
பஞ்சு பஞ்ச வேக வெச்சி

பானயிலே ஊத்தி அத
போதச்சு வெச்சோம் மண்ணுக்குள்ள

போதையிலே சுண்ட கஞ்சி
போதச்ச எடம் தெரியலியே

ஆஹா ஆஹா….
வடபழனி முருகா
அடிரா மச்சி

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
ஹே வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேனடா
வருஷதுல எல்ல நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா
என் பேரு ஆறுடா
ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக
டார் டார் டார்

ஹே கூவும் நதி ஓரதுல
குந்திகின்னு கூவிகினோம்
ஹே சயங்கால நேரத்துல
ஹே சுன்டகஞ்சி ஊத்திகினோம்

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

ஹே பள்ளிகூடம் போகும்போது
அருவாளால பென்சில் சீவுவேன்
புடிச்ச நிறம் ரத்தமுன்னு
பிளேடால தான் நான் கிறுகினேன்
ஹே அண்டர்வேர் கோடுதெரிய நான் லுங்கி கட்டுவேன்
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்
கடலுகட்ட போல நான் சுத்தும் ஆளு டா
தங்க மெடலுபோல உடம்புகுள்ள காயம் நூறுட
மூ ரெண்டு ஆறு டா
முன்கோப ஆளு டா
அவன நீ முறைச்சாக
டார் டார் டார்

ஹே கூவும் நதி ஓரதுல
குந்திகின்னு கூவிகினோம்
ஹே சயங்கால நேரத்துல
ஹே சுன்டகஞ்சி ஊத்திகினோம்

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

ஹே ஹே காடு புல்லு பொல நானும்
தானகவே முளைச்சவன்
ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல
டாஸ்மார்குல கடன் வெச்சவன்
ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா
நான் ஆபத்துல ஊடு கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள கிங்குன்ன சுறாமீனுடா
இந்த கரையில தான் கிங்குன்ன ஆறு நானுடா
எல்.ஐ.சி ஹைட்டுடா
நான் வந்த வெயிட்டுடா
ஃபைட்டுன்னு வந்தாக்க
டார் டார் டார்

ஹே கூவும் நதி ஓரதுல
குந்திகின்னு கூவிகினோம்
ஹே சயங்கால நேரத்துல
ஹே சுன்டகஞ்சி ஊத்திகினோம்

சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
வாட வாட மாப்புள்ள
வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்

Freeya Vidu Lyrics

SingersJassie Gift, Vadivelu, Mukesh, M. L. R. Karthikeyan, Grace Karunas
MusicDevi Sri Prasad
LyricsNa. Muthukumar

ப்ரீயா வுடு

ஆண் : யே ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ

ஆண் : யே ஒன்னு ரெண்டு
மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா
ஒட்டிருவான் மெல்ல

குழு : ஹோய் போடு

ஆண் : யே ஒன்னு ரெண்டு
மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா
ஒட்டிருவான் மெல்ல

ஆண் : இன்னைக்கு டைம்
வருதோ அது மட்டும்தான்
உனக்கு சொந்தம் நாளைக்கு
டைம் வருமோ அது யாருக்கு
தான் என்ன தெரியும்

ஆண் : வேணாம் டா
வேணாம் டா வேணாம்
டா வேணாம் டா நாளை
நம்பி வாழ வேணாம் டா
தம்பி

ஆண் : யே ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ

குழு : ஓ ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ

ஆண் : யே ஒன்னு ரெண்டு
மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா
ஒட்டிருவான் மெல்ல

குழு : ……………………….

ஆண் : யே லண்டன்க்கு
லாபம் அடிக்க நெனச்சான்
அவன் கண்டம் விட்டு கண்டம்
போக துடிச்சான் கோயம்பேடு
ரோடு வண்டி மேல ஏறிச்சாம்
தக்காளியா நசுங்கி புட்டான்

ஆண் : யே கிண்டியில
ட்ரைன்னு ஒன்னு கிளம்பி
அது கோடம்பாக்கம்
போகணும் டா விரும்பி
தண்டவாளம் நடுவுல
புட்டுகிச்சுனா நம்ம
குப்பத்துக்கு வரும்டா
திரும்பி

ஆண் : யே அம்பி
எண்ணூரில் கடல்
புகுந்தால் நீ பெரம்பூரில்
குடிசை போடு யே
முட்டுக்காடு பாளம்
உடைஞ்சா மேடவாக்கத்தில்
குடி ஏறு

ஆண் : வேணாம் டா
வேணாம் டா வேணாம்
டா வேணாம் டா நாளை
நம்பி வாழ வேணாம் டா
தம்பி

ஆண் : யே ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ யம்மா

குழு : யே ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ யப்பா

ஆண் : யே ஒன்னு ரெண்டு
மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா
ஒட்டிருவான் மெல்ல

குழு : யே சரோஜா
அக்கா என்ன சவுண்ட்
உடாம க்கிற தொற
உன் வாய

பெண் : கம்பத்துல கொடி
பறக்கும் குப்பத்துல கொசு
பறக்கும் அடிச்சாக்கா அனல்
பறக்கும் தெரிஞ்சுகோடா
பேமானி

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

பெண் : சரோஜா அக்கா
சவுண்ட் உட்டா சுத்தி
சுத்தி ரவுண்டு உட்டா
கூட்டத்துல கல்லு
பறக்கும் புரிஞ்சுக்கோடா
சோமாரி

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பிட்டு படம் பாக்க
போனான் மாரி அவன் கூட
போன பொண்ணு பேரு மேரி
இடைவேள நடுவுல எச்ச
துப்புனா அய்யோ எதுருல
அவன் டாடி

பெண் : யே ரங்கநாதன்
தெரு ரொம்ப பழசு அங்க
பூவ கட்டி விக்குறாலே
சரசு டாவ் அடிக்க வந்தானே
ஒரு பெருசு அட மாட்டிகிட்டா
ரொம்ப ரௌசு

ஆண் : யே அண்ணா நகர்
ஏரியாவுல யே யாருக்குதான்
யாரு சொந்தம் இந்த ஆண்டாள்
குப்பம் ஏரியாவுல நம்ம
எல்லோருக்கும் ஆறு
சொந்தம்

ஆண் : வேணாம் டா
வேணாம் டா வேணாம்
டா வேணாம் டா நாளை
நம்பி வாழ வேணாம் டா
தம்பி

ஆண் : யே ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ யக்கா

குழு : யே ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
மாமே வாழ்க்கைக்கு
இல்ல கேரண்டீ ப்ரீயா
வுடு ப்ரீயா வுடு ப்ரீயா
வுடு மாமே உன் கனவுக்கு
இல்ல வாரண்டீ

ஆண் : யே ஒன்னு ரெண்டு
மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
பெண் : யே ஒன்னு ரெண்டு
மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
ஆண் : உன் நெத்தியில ஒத்த
ரூபா ஒட்டிருவான் மெல்ல
பெண் : உன் நெத்தியில ஒத்த
ரூபா ஒட்டிருவான் மெல்ல

Thotute Lyrics

SingersKarthik, Sunitha Sarathy
MusicDevi Sri Prasad
Lyrics
Pa. Vijay

தொட்டுட்ட தொட்டுட்ட

குழு : { தொட்டுட்ட தொட்டுட்ட
என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட
சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட
உன்னால பத்திகிச்சு என் வயசு } (2)

பெண் : ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட
உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு
சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால
சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு
என் வயசு

பெண் : அய்யய்யோ தாங்காதையா
கண்ணு ரெண்டும் தூங்காதையா
என் பேர சொல்ல சொன்னா உன்
பேர சொல்ல சொல்லி தாக பேயா
மாறி போனேனே

பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு

ஆண் : ஹே தொட்டுட்டேன்
தொட்டுட்டேன் தெரியாம
தொட்டுட்டேன் தொட்டுட்டு
உள்ளங்கைய நான் சுட்டுட்டேன்
பட்டுட்டேன் பட்டுட்டேன் புரியாம
பட்டுட்டேன் லேசாக பட்டதுக்கே
நான் கெட்டுட்டேன்

பெண் : ஆயிரத்தில் ஒருவனாய்
வந்து அடிமை பெண்ணாய் மாற்றி
விட்டாய் காதலுடன் கற்பையும்
தந்து உயிரை திருடி ஓடி விட்டாய்

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
உன் உயிர நீயே வச்சிக்கோ யே
தச்சுக்கோ தச்சுக்கோ உன்
திருவாய் மட்டும் தச்சுக்கோ

பெண் : செவ்வாயில் நீயும்
சென்று வாழ்ந்தாலும் அங்கே
வந்து உன் வாய் ஓரம் என்
வாய் தருவேனே

பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு

பெண் : ஆயுதங்கள் பேசினால்
புரியும் அழகி பேச்சு புரியலையா
ஊருக்குள்ளே வன்முறைகள்
செய்வாய் உடம்புக்குள்ளே
செய்யலையா

ஆண் : ஹோய் எட்டிபோ
எட்டிபோ இது எக்கு கோட்டை
எட்டிபோ அச்சச்சோ அச்சச்சோ
என் ஆயுள் ரேகை கெட்டுசோ

பெண் : காகிதம் ஆனால்
என்ன கந்தகம் ஆனால்
என்ன கன்னி தீயில் கருகி
போகாதா

ஆண் : என் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு பைத்தியம்
ஆயிடுச்சு காதலென்னு ஹை

பெண் : ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ
தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு

Nenjam Ennum (sad) Lyrics

SingersGopika Poornima
MusicDevi Sri Prasad
LyricsPa. Vijay

நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : வாழ்க்கை என்னும்
வீதியிலே மனசு என்னும்
தேரினிலே ஆசை என்னும்
போதையிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய்
கரைந்தேனே ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

Leave a comment