Agni Natchathiram Movie Songs Lyrics – அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள்

Agni Natchathiram Movie Songs Lyrics – அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள்

தமிழ் திரை உலகில் இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பது என்பது ஒரு பொதுவான பழக்கம் தான் அனால் இரண்டு கதாநாயகர்கள் தங்களுக்குள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் திரைக்கதையுடன் வந்த இந்த திரைப்படம் மணிரத்னம் அவர்களுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்தது . இளையராஜா கூட்டணியில் அனைத்து பாடல்களும் வெற்றி பாடல்களாக அமைந்தன ,பி சி ஸ்ரீராம் கேமரா கைவண்ணத்தில் அனைத்து பாடல்களும் நேர்த்தியாக படம் பிடிக்க பட்டு இன்றளவும் பேசப்படும் பாடல்களாக ஜொலிக்கின்றன

Movie NameAgni Natchathiram
படத்தின் பெயர் அக்னி நட்சத்திரம்
StarringPrabhu, Karthik, Amala, Vijayakumar
MuiscIlaiyaraaja
Year1988

Oru Poongavanam Lyrics

வாலி அவர்களின் எழுத்தில் இளையராஜா இசையில் ஜானகி பாடிய இந்த பாடல் இந்த கால இளைஞர்களை வசியம் செய்த ஒரு பாடல் ஆகும் .தனிமையில் கதாநாயகி நீச்சல் குளத்தில் இருக்கும்போது படுவதாக அமைந்த இந்த பாடல் ஜானகி தனிமை பாடல்கள் ஐந்தே பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது

SingersS. Janaki
MusicIlaiyaraaja
LyricsVaali

ஒரு பூங்காவனம் புதுமணம்

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்…)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்…)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்…)

Raaja Raajathi Lyrics

SingersIlaiyaraaja
MusicIlaiyaraaja
LyricsVaali

வாலி அவர்கள் இளையராஜா தன்னை பற்றி படுவது போல் கற்பனையுடன் எழுதிய பாடல் அந்த காலா இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . திரை துறையினரால் ராஜா என்று அழைக்க படும் இளையராஜா இந்த பாடலை படி இருப்பார் . துடிப்பு மிக்க இளைஞராக கார்த்தி அவர்களின் நடனம் இந்த பாடலுக்கு மெருகூட்டுவதாக அமைந்தது

ராஜா ராஜாதி

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா

(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)

வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு

நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்

நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)

இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு

உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்

நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)

Thoongatha Vizhigal Lyrics

SingersK. J. Yesudas, S. Janaki
MusicIlaiyaraaja
LyricsVaali

மெலடி டூயட் வகையான பாடல் தொகுப்பு ஒன்று தயார் செய்தல் அதில் முக்கியமாக இடம் பெற வேண்டிய பாடல் இதுவாகும் யேசுதாஸ் ஜானகி குரலிக் வாலி அவர்களின் எழுத்தில் அக்னி நட்சத்திரம் படத்தில் இடம் பெட்ரா இந்த பாடல் இன்றளவும் இசை தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்ப படும் டூயட் ஆகும்

தூங்காத விழிகள்

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)

மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
அ..அஅ..அஅ.. ஆஆ.. ஆஆ..
(தூங்காத..)

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கலை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மானுடம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
அ..அ..ஆஆ..ஆஆ..
(தூங்காத..)

Roja Poo Adivanthathu Lyrics

SingersS. Janaki
MusicIlaiyaraaja
LyricsVaali

அமலா அவர்கள் புகழின் உச்சியில் இருந்த நேரம் ,கதாநாயகி தனி பாடலாக இந்த பாடல் வெளிவந்தது அமலா அவர்களின் நடனம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய காரணங்களுக்காக அதிக ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வாய்த்த பாடல் இதுவாகும்

ரோஜப்பூ ஆடிவந்தது

ரோஜப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
(ரோஜாப்பூ..)

நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது 
சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கோதிப்போ
சொல்லி சொல்லி பொழுதை
இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தனிந்தது
(ரோஜாப்பூ..)

நீயும் அச்சம் இடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு
அந்தி பகல் இரவு
சிந்தை குளிர்ந்தது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது
இதோ இதோ உன்னாலே
விழாமல் மோகம் வாட்டுது
தாங்குமா
(ரோஜாப்பூ..)

Vaa Vaa Anbe Anbe Lyrics

SingersChithra, K. J. Yesudas
MusicIlaiyaraaja
LyricsVaali

வா வா அன்பே அன்பே

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
காணல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

Ninukori Varnam Lyrics

SingersK. S. Chithra
MusicIlaiyaraaja
LyricsVaali

புதிய இசை கருவிகளுக்கு இளையராஜா மாறிவரும் தருணம் பழைய இசை கருவிகள் இல்லாமல் புதிய தொகுப்பாக புதிய முறையில் இசையமைக்க பட்ட பாடல் இதுவாகும் ,குறிப்பாக இதில் பயன்படுத்த பட்ட டிரம்ஸ் பலரையும் ஈர்த்தது . அமலா அவர்களின் நடனம் அந்த கால ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .சித்ரா ஹிட்ஸ் என்று தேடினால் முதலில் அனைவரது நினைவிருக்கும் வருவது இந்த பாடல்

நின்னுக்கோரி வர்ணம்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

Leave a comment