Anjaan Movie Songs Lyrics – அஞ்சான் பாடல் வரிகள்

Anjaan Movie Songs Lyrics – அஞ்சான் பாடல் வரிகள்

Movie NameAnjaan 
படத்தின் பெயர் அஞ்சான் 
StarringSuriya, Samantha
MuiscYuvan Shankar Raja
Year2014

Bang Bang Bang Lyrics

SingersRanjith
MusicYuvan Shankar Raja
LyricsMadhan Karky

Bang Bang Bang

Bang Bang Bang
Bang Bang Bang

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
இங்க அப்பப்ப அங்கங்க தீ பத்துமே
ஓர் ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே
அந்தேரி புலி பேரை சொன்னா அடிநெஞ்சிலே Bang Bang Bang
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே Bang Bang Bang
ராஜுபாய் வந்து முன்னாலே நின்னா Bang Bang Bang
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே Bang Bang Bang
ராஜுபாய் வந்து முன்னாலே நின்னா
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்

பாசம் கேட்டா கொட்டித்தள்ளு வேஷம் போட்டா வெட்டித்தள்ளு
ராஜுபாயின் மந்திரமே அதுதானே
கோவம் வந்தா ஆரப்போடு நேரம் வந்தா கூறுபோடு
ராஜுபாயின் தந்திரமே அதுதானே
ஹே காட்சி மாறும் போதும் அவன் ஆட்டம் மாறாதே
ஹே ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே
ஹரே வா வா வா வா வாரே வாரே வா
Bang Bang Bang
Bang Bang Bang

ஊர் முழுக்க அன்பிருக்கு தோள் கொடுக்க நட்பிருக்கு
நாங்க சேத்த சொத்து எல்லாம் அதுதானே
நியாயம் வெல்ல சட்டம் வேணாம் தர்மம் செய்ய பட்டம் வேணாம்
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே
நீ காச வீசிப்பாரு இங்க வேலைக்காகாதே
ஒரு ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே
ஹரே வா வா வா வா வாரே வாரே வா
Bang Bang Bang
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே Bang Bang Bang
ராஜுபாய் வந்து முன்னாலே நின்னா Bang Bang Bang

Ek Do Theen Lyrics

Singers
Suriya, Andrea Jeremiah
MusicYuvan Shankar Raja
LyricsNa. Muthukumar

ஏக் தோ தீன்

ஓ ஓ ஓ …
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட
ஹே …
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட
அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட
ஹே …
மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி … டி டி டி…
ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
நான் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

Kaadhal Aasai Lyrics

SingersYuvan Shankar Raja, Sooraj Santhosh
MusicYuvan Shankar Raja
Lyrics
Kabilan

காதல் ஆசை

ம்… ந ந ந ந….
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேரமோ
 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
 காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிராய்
நினைவுகளில் மொய்க்காதே நிமிடமுல்லில் தைக்காதே
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்
 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே

ம்… விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை
யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்
 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே

Oru Kan Jaadai Lyrics

SingersBenny Dayal, Shweta Pandit
MusicYuvan Shankar Raja
LyricsViveka

ஒரு கண் ஜாடை

ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே

நா ந ….
வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடு பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே

தொடரும் போட்ட கதையை போல இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
நா ந ….

Sirippu En Lyrics

SingersM. M. Manasi
MusicYuvan Shankar Raja
LyricsViveka

சிரிப்பு என்

ஓ.. சிரிப்பு என் Speciality சிலுக்கு ஸ்மிதா Community
ஆஹா ஆஹா …
Day by Day Majority Take it Easy Mentality
ஆஹா ஆஹா …
ஏ பாப்பா போல Maturity அட பசங்க கூட்டம் Security
என் அழகுக்கே நான் Authority என் அடிமை இங்கே Mumbai city
Rainbow Rainbow லேஹில்லா Rest-ஏ இல்லா லேஹில்லா
ஏழு கல் லாஹில்லா நானடா…
ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கரவம் நீக்கவா
கழுத்தும் நான் நோக்கவா சொல்லடா
ஓ.. ஓ.. சிரிப்பு என் Specialty சிலுக்கு ஸ்மிதா Community
ஆஹா ஆஹா …

Orthodox Family Strict-ஆ இருப்போமே
Boys கிட்ட மட்டும் தான் நாங்க Heart-ஏ திறப்போமே
ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும் நான் Dual Sim Card-உ
மனசும் பறக்குமே காத்தோடு
உலகம் இனிக்குமே Youth-தோடு
எனக்கு பிடிக்குமே கூத்தாடு
ஹே இளமை தேகமே பூத்தாடு
மூடா வாடா ஸ்பீடா சூடா மாடல் செய்வேனே
Rainbow Rainbow
Rainbow Rainbow லேஹில்லா Rest-ஏ இல்லா லேஹில்லா
ஏழு கல் லாஹில்லா நானடா…

ஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி
Fans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி
Heart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி
படுத்து தூங்கிட Five Star-உ
பருவ பாடமோ Tin Beer-உ
பிடிச்ச ஆளுடன் Long Tour-உ
Fifty Kiss-உ தான் என் Share-உ
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா
ஓஹு….

Leave a comment