Ayngaran Movie Songs Lyrics – ஐங்கரன் பாடல் வரிகள்

Ayngaran Movie Songs Lyrics – ஐங்கரன் பாடல் வரிகள்

Movie NameAyngaran 
படத்தின் பெயர் ஐங்கரன் 
StarringG. V. Prakash Kumar, Mahima Nambiar
MuiscG. V. Prakash Kumar
Year2020

Takkaru Paarva Lyrics

SingersSiddharth Mahadevan, G.V. Prakash Kumar
MusicG. V. Prakash Kumar
LyricsShiva Shankar
MovieAyngaran 
Year2019

டக்கரு பார்வ பாக்குறியே

டக்கரு பார்வ பாக்குறியே
டக்குனு போத ஏத்துறியே
பக்குனு பாத்தா மாதிரியே
திக்கி நீ பேச வைகுறியே

நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தல போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே

மதரு டங்க மறந்தேனே
செதறு தேங்கா ஆனேனே
தரையில நா மெதந்தேனே
பறந்தேனே

குத்திட்டு கண்ணால
குத்திட்டு போகுறியே
வித்த நீ காட்டுறியே
காட்டுறியே

பாவியேன் மனச நீ
கழச்சியே
நெஞ்சில் ஓன்
ஆட்சிய அமட்சியே

டக்கரு பார்வ பாக்குறியே
டக்குனு போத ஏத்துறியே
பக்குனு பாத்தா மாதிரியே
திக்கி நீ பேச வைகுறியே

ஆறேழு மணியான தீந்து போகும்
ஆண்ட்ராய்டு நானில்லடி
ஏழேழு ஜென்மமும் கூடவரும்
ஒன்னோட உட்ப்பியடி

ஓவியத்தை ஓரங்கட்டும் கண்ணையே ஒன்
அழகத்தான் என்ன சொல்ல
ஒலங்கெங்குமே தேடிப்பாதான்
ஒண்ணாட்டம் பெண்னே இல்ல

என்காதல் வாட்ஸாப்புல
நீதானே டிபி புள்ள
நைட் எல்லாம் நான் தூங்கல
உன்னால ரொம்ப தொல்ல

டக்கரு பார்வ பாக்குறியே
டக்குனு போத ஏத்துறியே
பக்குனு பாத்தா மாதிரியே
திக்கி நீ பேச வைகுறியே

அய்யயோ முன்னால அவ நிக்குற
அஞ்சாறு நிலா வட்டம்தான்
பவர்கட்டு ஆனாலும் பறவைல
இன்வெர்டர் அவ கண்ணுதான்

இறகுப்பந்து நாந்தானடி
ஏகுறித்தான் எங்கேயோ பொனேண்டி
மரக்கிளையே ஒன்கிட்டத்தான்
மாட்டியே நிக்குறவேண்டி

கைவீசி நீ நடந்தா
காதெல்லாம் கிறுகிறுக்கும்
மலர்ப்பாதம் பட்டதனால்
மண்ணுக்கும் மதம் புடிக்கும்

டக்கரு பார்வ பாக்குறியே
டக்குனு போத ஏத்துறியே
பக்குனு பாத்தா மாதிரியே
திக்கி நீ பேச வைகுறியே

நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தல போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே

Thithipa Lyrics

SingersG. V. Prakash Kumar
MusicG. V. Prakash Kumar
LyricsVivek (lyricist)
MovieAyngaran 
Year2019

தித்திப்பா

குழு : ஹு ஹு வோஹ்
ஹு ஹு வோஹ்

ஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….ஆ….
மின்னலின் நேரடி சந்திப்பா…..ஆஅ
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி

ஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….அஆஅ….
மின்னலின் நேரடி சந்திப்பா…..அஆஅ…..
மூளை தாக்கி ஊமை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
எங்கோ கொண்டு சேர்க்குதடி

ஆண் : உன்னை தாங்கும் திமிரோடு
எனை பார்க்கும் கால் அணியே
உன்னை பார்த்த சிறு நேரம்
அது வாழ்வின் சாதனையே

ஆண் : கொஞ்சம் நீ நில்லு……ஹோ ஓ ஓ
எங்கும் போகாதே…..ஹோ ஓ ஓ
ஓடி சென்று ஊரை கூட்டி
உன்னை காட்ட வேண்டுமே

குழு : ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்
ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்

ஆண் : கவிழாமல் விழி ரெண்டும்
முறைத்துன்னை பார்க்குதடி
எழில் காட்டில் எது உண்மை
இது இன்மை கேட்க்குதடி

ஆண் : பாறை போல் நின்றேன்….ஹோ ஓ ஓ
தூளை போல் ஆனேன்…..ஹோ ஓ ஓ
என்று நான் உன் கைகள் தொட்டு
வாழ்வில் இன்பம் காணுவேன்…

ஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….அஆஅ….
மின்னலின் நேரடி சந்திப்பா…..அஆஅ….
வீசும் காற்றில் பேசும் கீற்றை
ஏதோ சொல்லும் நீள முடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி…ஈ……..

Taan Addi Lyrics

SingersRajaganapathy, Anthony Daasan, V.M. Mahalingam
MusicG. V. Prakash Kumar
LyricsRokesh
MovieAyngaran 
Year2019

தாக்கு பார்வை

Uyirinum Uyarndha Lyrics

SingersHariharan
MusicG. V. Prakash Kumar
LyricsMadhan Karky
MovieAyngaran 
Year2019

உயிரினும் உயர்ந்த

உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி கிடையாது

கீழே மிகக் கீழே
நம்பிக்கை புதையுதடா
மேலே அதன் மேலே
எல்லாமே சிதையுதடா

பிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு
இருளினை நிறுத்திடு ஐங்கரனே!
கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம்
ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே!

ஏன் இது ஏன்?
எமை நாமே அழிப்பது ஏன்?
ஏன் அது ஏன்?
பிறகுன்னை பழிப்பது ஏன்?

பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம்
பொசுக்கிட வா வா ஐங்கரனே!
நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்
நசுக்கிட வா வா ஐங்கரனே!

தீ ஒரு தீ
இதயத்தில் முளைக்குதடா
ஊர் முழுதும்
ஒரு சேர்ந்தே அணைக்குதடா

முடிந்திடும் முடிந்திடும் முடிந்திடும் என்றே
உறுதியை கொடுத்திடு ஐங்கரனே!
விடிந்திடும் விடிந்திடும் விடிந்திடும் என்றே
இரவினை முடித்திடு ஐங்கரனே!

Leave a comment