Kaatru Veliyidai Movie Songs Lyrics – காற்று வெளியிடை பாடல் வரிகள்

Kaatru Veliyidai Movie Songs Lyrics – காற்று வெளியிடை பாடல் வரிகள்

Movie NameKaatru Veliyidai
படத்தின் பெயர் காற்று வெளியிடை
StarringG. V. Prakash Kumar
MuiscA. R. Rahman
Year2017

Azhagiye Lyrics

SingersArjun Chandy, Haricharan, Jonita Gandhi
MusicA. R. Rahman
Lyrics
Madhan Karky
MovieKaatru Veliyidai
Year2017

அழகியே

Waiting for a புன்னகை சிரிடி     
காணவில்லை heartbeat திருடி……     
அடடா நான் கவிஞன் உனை பார்த்து     
கெட்டுப்போன கவிஞன்     
honest ah நான் பேசவா     
இல்லை இது போதுமா     
ஓ……மை டார்லிங் நாங்க கம்மிங்     
புது புது கணக்கெல்லாம் பென்டிங்
ஓ…  
chorus ah நான் கேட்கவா     
எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா      
அழகியே…… மேரி மீ மேரி மீ அழகியே………     
     
யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை     
அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி   
நீ தந்தால் நன்றி துளி துளிரே…………     
துளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன்     
துளி காமம் கேட்டேன் மறு உயிரே…………
    
மறுக்காதே நீ மறக்காதே நீ 
எந்தன் அழகியே…… நின்னி……      
நின்னி நின்னி நின்னி நின்னி நீ நீ நீ நீ நீ     
அழகியே……… மேரி மீ மேரி மீ அழகியே………     
கோபம் வந்தால் கூச்சம் வந்தால் டோன்ட் ஒரி     
அழகி ஏ அழகியே ஏ அழகியே………     
மேரி மீ மேரி மீ அழகியே………     
சொர்க்கம் நீ ஏ ஹாய் பிஸ் மி அழகியே………     
காதல் வந்தால் மேட்டர் வந்தால்     
call அடி…………     
அழகியே ஏ அழகியே ஏ! 

Tango Kelaayo Lyrics

SingersDiwakar, Haricharan
MusicA. R. Rahman
LyricsVairamuthu
MovieKaatru Veliyidai
Year2017

கேளாயோ கேளாயே

கேளாயோ கேளாயோ செம்பூவே…… கேளாயோ     
மன்றாடும் என் உள்ளம் வாராயோ……     

உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்     
உயிர் வாழா அன்றில் பறவை     
நான் அன்றில் பறவை……     

நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும்     
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்     

ஓ… நீ என்னை மறந்தால் காற்று கதறும்   
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்     

ஓ… நீ என்னை பிரியாய்     
ஓ…… நீ என்னை மறவாய்     
விட்டுப்போனால் வெட்டிப்போகும்     
விண்மீனெல்லாம் கொட்டிப்போகும்      (கேளாயோ)

என் குறைகள் ஏதுக்கண்டாய்     
பேசுவது காதலோ……     
பேணுவது காமமோ……     
பிரியமென்னப் போலியோ     
ஏன் பெண்ணே இடைவெளி……     
எதனா…ல் பிரிந்தா…ய்     
பிரிந்தா…ய் எதனா…ல்     
மறந்தாய் மறந்தாய்     (கேளாயோ)

Nallai Allai Lyrics

SingersChinmayi, Sathyaprakash
MusicA. R. Rahman
LyricsVairamuthu
MovieKaatru Veliyidai
Year2017

நல்லையல்லை நல்லையல்லை

வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய்     
ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய்     
என்னை நட்சத்திரக் காட்டில் அலையவிட்டாய்     
நான் என்ற எண்ணம் கலையவிட்டாள்     
நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை     
நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை     
     
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…     
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே…     
நானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டா…ய்      (நல்லை)
     
மும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே     
முகந்தொட காத்திருந்தே……ன்     
மலர்கின்ற நிலைவிட்டுப் பூத்திருந்தால்     
மனம் கொள்ள காத்திருந்தே……ன்     
மகரந்தம் தேடி நகரும்முன்னே     
வெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய்      (நல்லை)

Saarattu Vandiyile Lyrics

SingersA. R. Raihanah, Nikhita Gandhi, Tipu
MusicA. R. Rahman
LyricsVairamuthu
MovieKaatru Veliyidai
Year2017

சரட்டு வண்டில

சரட்டு வண்டில சிரட்டொளியில      
ஓரம் தெரிஞ்சது உன் முகம்     
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல      
மெல்லச்சிவந்தது என் முகம் (2)    
     
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு     
பத்திரம் பண்ணிக்கொடு     
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க     
சத்தியம் பண்ணிக்கொடு    
என் இரத்தம் சூடு கொள்ள      
பத்து நிமிசம் தான் ராசாத்தி     
     
ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ     
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ     
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய     
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா     
     
சேலைக்கே சாயம் போகும் மட்டும்     
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி     
பாடுபட்டு விடியும் பொழுது     
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி     
புது பொண்ணே……………      
அது தான்டி தமிழ் நாட்டு பாணி…………………      (சரட்டு-2)
     
வெக்கத்தையே கொழச்சி கொழச்சி     
குங்குமம் பூசிக்கோடி……     
ஆசையுள்ள வேர்வையப்போல் வாசம் ஏதடி     
     
ஏ பூங்கொடி வந்து தேன் குடி     
அவ கைகளில் உடையட்டும் கண்ணே கண்ணாடி……     
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது     
சுத்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்     
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே     
வித்தாரக்கள்ளிக்கு துள்ளாட்டம்     
     
அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்
இவ குரங்கு கழுத்தில் குட்டிய போலே தோளில் ஓட்டிக்கிட்டா     
இனி புத்தி கலங்குற முத்தங்கொடுத்திரு ராசாவே     
     
பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹ      
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி     
எடுத்து ரத்தனகட்டிய வெத்தல பொட்டில    
மூடச்சொல்லுங்கடி     
முதலில் மால மாத்துங்கடி பிறகு பாணை மாத்திங்கடி     
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா     
சேல மாத்துங்கடி     
     
மகராணி……………     
அதுதான்டி தமிழ்நாட்டு பாணி…………      (கத்தாழ)

Vaan Varuvaan Lyrics

SingersShashaa Tirupati
MusicA. R. Rahman
LyricsVairamuthu
MovieKaatru Veliyidai
Year2017

வான் வருவான்

வான் வருவான் வருவான் வருவான்     
வான் வருவான் வருவான் வருவா…………ன்     
வான் வருவான் வான் வருவா……ன்     
     
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்     
மர்மம் அறிவான்     
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்     
தொலைவில் பணிவான்     
கர்வம் கொண்டால் கல்லாய்     
உறைவான் கல்லாய் உறைவான் உறைவா……ன்     
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்     
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்     
என் கள்ள காமுகனே அவன் தான் வருவான்      (வான்)
     
என்னோடிருந்தால் எவளோ நினைவான்
அவளோடிருந்தால் எனையே நினைவான்     
என்னை துறவான் என் பேர் மறவான்     
என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான்
கண் கவிழ்ந்தால் வெளிபோல் விரிவான் 
கண் திறந்தால் கணத்தில் கரைவான்      (வான்)

Leave a comment