Mehandi Circus Songs Lyrics – மெஹந்தி சர்க்கஸ் பாடல் வரிகள்

Mehandi Circus Movie Songs Lyrics – மெஹந்தி சர்க்கஸ் பாடல் வரிகள்

Movie NameMehandi Circus
படத்தின் பெயர் மெஹந்தி சர்க்கஸ்
StarringMadhampatty Rangaraj, Shweta Tripathi, RJ Vigneshkanth, G. Marimuthu
MusicSean Roldan
Year2019

Vellatu Kannazhagi Lyrics

SingersSean Roldan
MusicSean Roldan
LyricsYugabharathi
MovieMehandi Circus
Year2019

வெள்ளாட்டு கண்ணழகி பாடல் வரிகள்

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

பேசாமலே
என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே
பல காயம் கொடுத்தா

வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா

பொண்ணே இல்ல
இவ ரோசா குடம்
கண்ண மூடமா
நான் பார்த்து பாராட்டும்
நல்ல காதல் படம்

ஹே பொய்யே இல்ல
இவ கோயில் ரதம்
ஒத்த பார்வைக்கு முன்னால
என்னாகுமோ இந்த சாதி மதம்

ஓ நாடு நகரம்
அறியா அழக
காட்டுறாலே தினுசா
ஆசை மனச ஹவுஸ் புல்லாக
ஆனேனே நான் சர்கஸ்ஸா

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

ஜில்லாவுக்கே அவ மேல கண்ணு
வந்து முன்னால நின்னாலே
நான் தேடுறேன் என்ன காணுமேன்னு

ஹ்ம்ம் எல்லாருக்கும் அவ ஹீரோயினு
சந்து பொந்தெல்லாம்
வில்லன்கள் நின்னாலுமே
லவ்வ காப்பேன் நின்னு

ஓ ஓஒ ஊரும் தெருவும்
கெடயா கெடக்க
யார பாப்பா திரும்பி
கோண சிரிப்பில் கேனயன் ஆகி
போனேனே நான் குழம்பி

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

பேசாமலே என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே
பல காயம் கொடுத்தா

வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா

Kodi Aruvi Lyrics

SingersPradeep Kumar, Nithyashree
MusicSean Roldan
LyricsYugabharathi
MovieMehandi Circus
Year2019

கோடி அருவி கொட்டுதே

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா
பொங்கி வழிஞ்ச

பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச

சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல

அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே

என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே

ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

Love Polladhadhu Lyrics

SingersVijay Yesudas
MusicSean Roldan
LyricsYugabharathi
MovieMehandi Circus
Year2019

லவ் பொல்லாதது

லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது

ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே
ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே

தண்ணீரில் காய்ந்த ஓர் இலை இலை
தள்ளாடும் காதலின் நிலை நிலை
கண் மீன்கள் வீசிடும் வலை வலை
கண்ணே சொல் யாரது பிழை பிழை

சினிங்கிடும் கொலுசு
விலகிடும் போது
உயிரனும் முழுதும் கதராதோ

பாராமல் நீ போக
பாழகும் என் வாழ்வை
காப்பற்ற வா செல்லமே

லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது

ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே

லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது

ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே ஏ ஏ

Siragi Un Sirippaala Lyrics

SingersSathyaprakash, Lalitha Sudha
MusicSean Roldan
LyricsYugabharathi
MovieMehandi Circus
Year2019

சிறகி உன் சிரிப்பால

சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால

வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற

வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி

சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா தனா
தோம்தனனா திரனாதனா

நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா

வெல்ல கட்டி உன்ன கண்டா
விக்கல் வந்து தவிக்கிறேன்
வித்தைக்காரி செஞ்ச வித்த
சாதி சனம் மறக்குறேன்

எட்டு வெச்சு நீயும் போகையில்
புத்தி கெட்டு போறேன்
கட்டுப்பெட்டி ஆன ஊருல
தள்ளி நானும் வாரேன்

ஒட்டு மொத்தத்தையும்
விட்டுட்டு நான் வாரேன்
பத்து தலைமுற
சொந்தமும் நான் தறேன் என்

சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால

வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற

வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி

வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி

Aavoji Lyrics

SingersSanthosh Narayanan
MusicSean Roldan
LyricsSean Roldan
MovieMehandi Circus
Year2019

ஆவோ ஜி

சர்க்கஸ்சு
ஹே ஹே ஹே ஹே
சர்க்கஸ்சு

ஆவோ ஜி
ஜல்தி ஆவோ ஜி
பய்டோ ஜி
ஜல்தி பய்டோ ஜி

ஆவோ ஜி ஹேய்
ஜல்தி ஆவோ ஜி
கூடாரம் போட்டாச்சு
புறபடுங்க ஜி

பய்டோ ஜி ஹேய்
ஜல்தி பய்டோ ஜி
சாகசம் ஆரம்பமானா
பிகிலு பறக்கும் ஜி

ஜோலி எல்லாம் முடிஞ்சாச்சு
ஜாலி நேரம் வந்தாச்சு
பொடிசு பெருசு
ஓ ஹோ ஹோ இளசு பழசு
எல்லோரும் குசியாக கொண்டாட
கூட்டமா வாங்க

மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு
ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு

ஹோய் டுர்ர்ர்ராஹா
ஹோய் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரப்பபா

ஆவோ ஜி
ஜல்தி ஆவோ ஜி
பய்டோ ஜி
ஜல்தி பய்டோ ஜி

ஆவோ ஜி ஹேய்
ஜல்தி ஆவோ ஜி
கூடாரம் போட்டாச்சு
புறபடுங்க ஜி

பய்டோ ஜி ஹேய்
ஜல்தி பய்டோ ஜி
சாகசம் ஆரம்பமானா
பிகிலு பறக்கும் ஜி
பிகிலு பறக்கும் ஜி

மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு
ஹே ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு

Veyil Mazhayae Lyrics

SingersVignesh Ishwar , Susha
MusicSean Roldan
LyricsSaravanan Rajendran
MovieMehandi Circus
Year2019

வெயில் மழையே

வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

மௌன பேச்சு நீ
கொஞ்சம் பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

மேகம் மூடுதே மூடுதே
காலம் ஓடுதே ஓடுதே
என் பாதை போகும்
தூரம் நீளுதே

ஓஹ் வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

ஆயிரம் முகங்கள்
பார்க்கிறேன் நாளும்
உன் முகம் எங்கே பார்ப்பேனோ
நிலம் எங்கும் பறந்து
திரிகிறேன் நானும்
உன்னிடம் வந்து சேர்வேனோ

செல்ல குளிரே
தங்க தனலே
அந்தி ஒழி நீயடி
ஒட்டறை கனவே
சுற்றும் நிலவே நீதானே

என் அருகில் வந்த இசை
தூரம் தள்ளி போனதடி
அந்த திசை தேடி தேடி தேடி
உயிரும் தேயுதே

மௌன பேச்சு நீ நீ
கொஞ்சம் பேசிடு பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

மேகம் மூடுதே
காலம் ஓடுதே
என் பாதை போகும்
தூரம் நீளுதே

ஓஹ் வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

வெயில் மழையே
மின்னல் பூவே நீ
நீ நீ எங்கே

Leave a comment