Oh My Kadavule Songs Lyrics – ஓ மை கடவுளே பாடல் வரிகள்

Oh My Kadavule Songs Lyrics- ஓ மை கடவுளே பாடல் வரிகள் பாடல் வரிகள்

Movie NameOh My Kadavule
படத்தின் பெயர் ஓ மை கடவுளே 
StarringAshok Selvan, Ritika Singh, Vani Bhojan, Sha Ra
MuiscLeon James
Year2020

Ennada Life Idhu Lyrics

SingersSanthosh Narayanan
MusicLeon James
LyricsKo Sesha
MovieOh My Kadavule
Year2020

என்னடா லைப் இது

அலாரம் காதுக்குள்ள
ஊன்னு சங்கு ஊத
தள்ளாடி பெட்ட விட்டு
மப்பாக எழுந்து போக

டாய்லெட்குள்ள கூட
டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே

நாஸ்தாவ தட்டில் போட்டு
பாஸ்டாக கொட்டிகிட்டு
பைக்கோட சண்டை போட்டு
கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு

ஒன் வேயில் ராங்கா பூந்து
ஓ வேர்டில் திட்டு வாங்கி
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே

என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது

ஓ என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
விடிவு காலம் பொறக்கதான்
பிரேக் த சைக்கிள்லு

கேபின்குள்ள பாஸ்சு
கூப்ட்டு வச்சி செஞ்சி
கேவல படுத்தினாலும்
கூலா சிரிக்குறோம்

இன்கிரீமெண்ட்டு கேட்டா
நெக்ஸ்ட் இயர் உண்டு
ஹெச் ஆர் சொல்ல கேட்டு
சுத்தி அலையறோம்

ஹேல்த் கான்னு கான்னு
பிஎம்ஐயும் கெஞ்ச
வெல்த் எங்க மாமு
ஈஎம்ஐய மிஞ்ச

9 டு 6 லைப்பு
நச்சு பண்ணும் வொய்ப்பு
ரெண்டும் ஒன்னுதான்
ஊசி போன பன்னு நான்

என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ…..ஆ….ஓ ஓஹ்

என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு

நெருப்பு மாதிரி
வேலை செய்வோம் குமாரு
தியாகம் தான் உன்னை உயர்த்தும்
(வசனம்)

என்ன என்ன என்ன என்ன …..
என்னடா லைப் இது

இந்த வெத்து ஜாப் இனி செய்ய
வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல
ரோஷம் ஏறும் நேரம்
போன்ன பாத்தா
யுவர் சேலரி ஹாஸ் பீன் கிரெடிடெட்

என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ…..ஆ….ஓ ஓஹ்

என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு

Friendship Anthem Lyrics

SingersAnirudh Ravichander, M. M. Manasi
MusicLeon James
LyricsKo Sesha
MovieOh My Kadavule
Year2020

பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு

நட்புக்கு வயதில்லை
என்று ஒரு ஞானி
சொன்னானே ஓ சொன்னானே
மெய்யான நட்புகிங்கே
பிரிவில்லை என்றும்
சொன்னானே ஓ சொன்னானே

ஆல்மோஸ்ட் டைபர் கட்டும்
காலம் தொடங்கி நாமும் தோள்கள்
உரசி நடந்தோம்

குஸ்தி பைட்டும் போட்டு
ஒன்றாய் முஸ்தபாவும் பாடி
வாழ்வை கடந்தோம்

நாம் எழில் நதிகளில்
ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே
இல்லை வெளி வேஷம்தான்

பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…ஊ….ஊ….
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….ஊ….
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

காலேஜ் கட் அடிச்சு தல படம் போனோம்
போனோம்…… போனோம்
எக்ஸாமில் பிட் அடிச்சும் ஜஸ்டு பெயிலு ஆனோம்
ஆனோம் ஆனோம்

சொத்தில் கூட பங்கு உண்டு
சமொசவில் பங்கில்லையே
கலப்படம் ஏதுமில்லா
காலம் அந்த காலம்தானே

பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….ஊ….ஊ
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….
ஆயிரம் உறவு வந்தாலும்….ம்ம்….ம்ம்ம்
நண்பன்தான் கெத்து நமக்கு

நட்புக்கு வயதில்லை
என்று ஒரு ஞானி
சொன்னானே ஓ சொன்னானே
மெய்யான நட்புகிங்கே
பிரிவில்லை என்றும்
சொன்னானே ஓ சொன்னானே

கள்ள தம் அடிச்சி
கூட்டா சைட் அடிச்சி
பைக்கில் சுற்றி திரிந்தோம்

மொட்ட மாடிமேல
வெட்டி கதை அடிச்சி
கோடி ஆண்டு களித்தோம்

நாம் எழில் நதிகளில்
ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே
இல்லை வெளி வேஷம்தான்…ஆஅ…..ஹா…

பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….ஊ….ஊ
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….
ஆயிரம் உறவு வந்தாலும்….ம்ம்….ம்ம்ம்
நண்பன்தான் கெத்து நமக்கு

பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு

Haiyo Haiyo Lyrics

SingersLeon James
MusicLeon James
LyricsKo Sesha
MovieOh My Kadavule
Year2020

ஹையோ ஹையோ

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல…..

Bougainvillea ரோஸ் எல்லாம்
போதை ஏறி கேட்குமாம்
அவ புது பூவினமா…..பூவினமா
ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம்
வெக்க பட்டு கேட்க்குமாம்
அவ அஞ்சு அடி கவிதையா

மூடு பனி நேரம் பார்த்து
அவளோடு ஈசிஆர்யில்
லாங் டிரைவ்வு போக சொல்ல
அவளால அவசதைகள் ஏராளம்தான்
ஹையோ என் லைப்புல
லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல…..

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல…..

ஆரோமலே பேபி
அவ பியூட்டி
தனி கிளாஸ்சுதான்
ஹிப்னாடிக் கண்ணால
என்ன மயங்க வச்சிட்டாலே

கோல்டில் செஞ்ச தெரு
அவ நடந்த
செம மாஸ்சுதான்
வடம் புடிச்சி பின்னால்
என்ன அலைய வச்சிட்டா

அந்த கோகினூரு திருடி
அவ கால் கொலுசில் மாட்டி
அத ஹனிமூன்லதான்
தருவேன்…..தருவேன்
ஒண்ணா சேர்ந்து வாழத்தானே
ஒரு லோன் போடுவேனே
அந்த காஷ்மீருல
வீடு வாங்குவேனே…..ஏ……

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல…..

அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல…..

அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ கண்ணா வச்சி தாக்குறா
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா

அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ மனச அலசி தொவைக்குறா
என்ன முழுசா மெண்டல் ஆக்குறா

Kadhaippoma Lyrics

SingersSid Sriram
MusicLeon James
LyricsKo Sesha
MovieOh My Kadavule
Year2020

கதைப்போமா

நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை
இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்

இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா

கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

Kadhal Kozhappudhey Lyrics

SingersSanjeev Thomas
MusicLeon James
LyricsKo Sesha
MovieOh My Kadavule
Year2020

காதல் கொழப்புதே

என் மனசு மனசுதான்
ரெக்கை கட்டி பறக்குது
என் வயசின் வேலைதான்
ரசாயணம் சுரக்குது

நான் சொக்குறேன் ஹையோ
உயிர் மூச்சு எங்க போச்சு
நான் திக்குறேன் ஏனோ
தாய் மொழியே மறந்து

என் ஆசை என் ஆசை
அடி பட்டு கெடக்கு இங்க
இனிமேலும் இனிமேலும்
வலி தாங்க முடியாதே

ஆனாலும் ஆனாலும்
எனக்குள்ளே புது மயக்கம்
விதியோ விதியோ
ஆஹ் காதல் கொழப்புதே….எஹ்
இந்த காதல் கொழப்புதே….எஹ்
அடியே….
இந்த காதல் கொழப்புதே….எஹ்
என் மனசும் சறுக்குதே….
அடியே….

கொண்டாட்டம் பாதி
திண்டாட்டம் பாதி
என்னோட வாழ்க்கை ஆனதே…..ஏ…..ஏ….ஏ….
பொல்லாத நாடகங்களே……ஏ……ஏ…..ஏ…..

நான் அடிக்கும் புயலில்
சிக்கி பலரும் சிறு முயலா
நீ பொழியும் மழையில்
எனக்கான குடையா….

என் ஆசை என் ஆசை
அடி பட்டு கெடக்கு இங்க
இனிமேலும் இனிமேலும்
வலி தாங்க முடியாதே

ஆனாலும் ஆனாலும்
எனக்குள்ளே புது மயக்கம்
விதியோ விதியோ
ஆஹ் காதல் கொழப்புதே….எஹ்
இந்த காதல் கொழப்புதே….எஹ்
அடியே….
இந்த காதல் கொழப்புதே….எஹ்
என் மனசும் சறுக்குதே….
அடியே….

ஓஹோ…..

அடியே…..ஏ…..

ஓஹோ…..

அடியே…..ஏ…..

காதல் கொழப்புதே….

காதல் கொழப்புதே….

இந்த காதல் கொழப்புதே….ஏ…

Leave a comment