Thamezharasan Movie Songs Lyrics – வால்டர் பாடல் வரிகள்

Thamezharasan Movie Songs Lyrics – வால்டர் பாடல் வரிகள்

Movie NameThamezharasan
படத்தின் பெயர் தமிழரசன்
StarringVijay Antony
MuiscVijay Antony
Year2020

Neethan En Kanavu Lyrics

SingersS. P. Balasubramaniam
MusicVijay Antony
LyricsPalani Barathi
MovieThamezharasan
Year2020

நீதான் என் கனவு மகனேபாடல் வரிகள்

நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு

மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே

நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
மழையாய் கருணை
பொழிவான் இங்கு அவனே

நீதான் என் கனவு மகனே

ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இது தானே நாம் கண்ட
உண்மை உலகில்

வழிகளை அறியாத
இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு
என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா
ஏதும் இல்லாதார் வாழ்விலே

நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு

நீதான் என் கனவு மகனே

தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீக்கூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்

கனவுகள் மெய் ஆகும்
அது கற்பனை கிடையாது
அழைத்திடும் திசை எங்கும்
இனி நீ வந்து விளையாடு
காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே

நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு

மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே

நீதான் என் கனவு மகனே……

Pakkurappo Pakkurappo Lyrics

SingersIlaiyaraaja, Neeti Mohan
MusicVijay Antony
LyricsARP. Jayaraam
MovieThamezharasan
Year2020

பாக்குறப்போ பாக்குறப்போ பாடல் வரிகள்

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ

ஒருவர் போடும் ஆடைக்குள்
இருவர் போகலாம்
இருவர் போடும் ஜதிகளில்
இசையை தேடலாம்

பள்ளி கால கதைகளை
மடியில் பேசலாம்
விஷமம் செய்த விஷயங்கள்
நினைத்து மகிழலாம்

செல்ல சண்டை போடும்போது
காதல் கூடுதே
சின்ன சின்ன அன்பளிப்பில்
மையல் ஏறுதே

கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து
நோட்டம் பார்க்கிறாய்
வெப்ப மூச்சில் சூடு ஏற்றி
உருக வைக்கிறாய்

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

மலர்களும் கொண்டாடிடும்
கூடல் காலமே
பழகுகின்ற வைபவம்
காதல் பயணமே

உணர்வுகள் ஒன்றாகிடும்
இன்ப யாகமே
கலந்த அந்த அனுபவம்
காம வேதமே

இதழை தாண்டி போகும் போது
ஆசை சொல்லுவேன்
இன்ப ராகம் நீயும் மீட்ட
வீணை ஆகுவேன்

பாதி விழிகள் மூடும் அழகு
மூன்று நாள் பிறை
பாவை உடலில் பொங்கி வழியும்
காதல் நாள் மழை

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ

பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை

Poruththadhu Podhum Lyrics

SingersK. J. Yesudas
MusicVijay Antony
LyricsARP. Jayaraam
MovieThamezharasan
Year2020

பொறுத்தது போதும் பொங்கிட பாடல் வரிகள்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

உனக்கென எனக்கென
வழியில்லையா
உலகினில் பொதுவினில்
விதியில்லையா

நீதியும் நேர்மையும்
கலங்கிடுதே
தீமையும் துரோகமும்
வலம் வருதே
தர்மமும் நியாயமும் அழுகிறதே

போதும் இது போதும்
நாம் பொறுத்தது போதும்
வேண்டும் இங்கு வேண்டும்
நமது உரிமைகள் வேண்டும்
காலம் எதிர்காலம்
நமதாகிட வேண்டும்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா…..
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

நாடென ஒரு சிலர் உடமைகளா
நதிகளும் அவருக்கு அடிமைகளா
காசுக்கு வாங்கிய ஆட்சிகளா
மக்களின் வாழ்வென்ன வறுமையிலா

குற்றத்துக்கே துணை சட்டமடா
ஏழையிடம் விளையாடுமடா
நடந்துவிட்ட
அந்த தவறுகளை
திருத்திடவே
நம்மால் முடியும்

ஒரு குரலாக முழங்கிட வா
ஒரு இனமாக இணைந்திட வா
பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி
தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா…..
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

ரத்தத்தை சிந்திடும் ஏழையிடம்
புத்தனின் போதனை எடுபடுமா
விளக்கினில் விழுந்துட்ட விட்டிலை போல்
துடித்திடும் பேருக்கு வழி வருமா
பேசுவதெல்லாம் அமைதி என்றால்
ஆயுதம் செய்வது எதற்கு இங்கே

தடை உடைத்து
தடை காத்திடுவோம்
இடை மறித்தால்
படை பெருக்கிடுவோம்

தீபத்தை நெருப்பென சொல்லாதே
நெருப்பினை தீயென தள்ளாதே
பொதுவினில் நமக்கொரு புது விதி ஆக்கி
தேசம் உயர்ந்து நிற்க சபதம் செய்வோம்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

உனக்கென எனக்கென
வழியில்லையா
உலகினில் பொதுவினில்
விதியில்லையா

நீதியும் நேர்மையும்
கலங்கிடுதே
தீமையும் துரோகமும்
வளம் வருதே
தர்மமும் நியாயமும் அழுகிறதே

போதும் இது போதும்
நாம் பொறுத்தது போதும்
வேண்டும் இங்கு வேண்டும்
நமது உரிமைகள் வேண்டும்
காலம் எதிர்காலம்
நமதாகிட வேண்டும்

பொறுத்தது போதும்
பொங்கிட வேண்டும்
புயலென வா….
அழுதது போதும்
அடங்கிய காலம்
முடியட்டும் வா….

Thamizhanoda Veeramellaam Lyrics

SingersSid Sriram
MusicVijay Antony
LyricsARP. Jayaraam
MovieThamezharasan
Year2020

தமிழனோட வீரம் எல்லாம் பாடல் வரிகள்

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

சரித்திரத்த பொரட்டி விடு
சாதனைய கணக்கு எடு
கணக்கில் இல்லா கணக்கு இதுடா….

வெற்றி கொடி தூக்கிபுடி
பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

சரித்திரத்த
பொரட்டி விடு
சாதனைய
கணக்கு எடு
கணக்கில் இல்லா கணக்கு இதுடா…..

வெற்றி கொடி
தூக்கிபுடி
பாட்டுபடி
வேட்டுவெடி வெட்டுவெடிடா….

வடக்கே இமயம் தொட்டு கல்லெடுத்து
தெற்க்கே தட்டி தட்டி சிலை எடுத்தான்
கப்பல் கட்டி கடலில் படை எடுத்து
எட்டு திக்கும் வெற்றி கொடிய நட்டான்

நாட்டோட எல்லையே இல்லாம ஆக்கினான்
பாட்டோட அடங்காது பத்தாது
தோற்றோடும் எதிரியின் தோளில் கல் ஏற்றியே
தூக்கவச்சு கோயில்கள் கட்டி வச்சான்

ஆண் மற்றும் முண்டாச கட்டிக்கிட்டு வா
தண்டோரா கொட்டிக்கிட்டு வா
முண்டாச கட்டிக்கிட்டு வா
தண்டோரா கொட்டிக்கிட்டு வா

நீ வெற்றி கொடி தூக்கிபுடி
பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

வெற்றிகென்றா ஆட்டம் ஆடுவது
கற்று கொண்டால் கிட்டும் வெற்றி அது
திட்டம் போட்டால் வெற்றி வந்திடுமா
நம்பி சென்றால் வெற்றி கை விடுமா

எல்லோருக்கும் நல்லவன் எங்கேயும் இல்லடா
கடவுளுக்கும் எதிரிகள் இருந்தாங்கடா
உன்னோட ஆடுறவன் உன்னோட நண்பன்தான்
உனக்கு அவன் போட்டிதான் எதிரி இல்லடா

தாய் பேச்ச தட்டிட மாட்டோம்
வாய் பேச்ச விட்டிட மாட்டோம்
தாய் பேச்ச தட்டிட மாட்டோம்
வாய் பேச்ச விட்டிட மாட்டோம்

நீ வெற்றி கொடி தூக்கிபுடி
பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா….

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

சரித்திரத்த
சரித்திரத்த
பொரட்டி விடு
பொரட்டி விடு
சாதனைய
சாதனைய
கணக்கு எடு
கணக்கு எடு
கணக்கில் இல்லா கணக்கு இதுடா….

வெற்றி கொடி
தூக்கிபுடி
பாட்டுபடி
வேட்டுவெடி வெட்டுவெடிடா….

Yaavum Yaavumey Lyrics

SingersV. V. Prasanna, Vibhavari Apte-Joshi
MusicVijay Antony
LyricsARP. Jayaraam
MovieThamezharasan
Year2020

யாவும் யாவுமே நீயானாய் பாடல் வரிகள்

யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய்
ராதை வந்ததாலா

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா

என்னில் வேறு…….
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா……
மொத்த வாழ்க்கையே
சுகமடா…..

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா….ஹேய்……

தம் தம் இருதயம்
புதியதா
சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம்
இணைந்ததால்
பந்தம் விளைந்ததா

தாலாட்டி தலை நீவி
தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற
மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன்
வாழ்க்கையை காதலா

நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா….ஹேய்…..

உலகம் தொடங்குதே உன்னிலே
பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென
என்றும் வெல்லடா

நீ ஏற என் தோள் ஏணி
வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி
தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே…

யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா

தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா…

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா…

என்னில் வேறு……
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா……
மொத்த வாழ்க்கையே
சுகமடா…..

Leave a comment